For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி" - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

11:38 AM Jun 03, 2024 IST | Web Editor
 வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி    சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
Advertisement

"அடுத்த ஒரு மாதத்தில் வார்டு வாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்" என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மூலம் நாய் கடிகள்
தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தெரு நாய்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது·

 தடுப்பூசி செலுத்தும் முகாமில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரு
நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில்
கால்நடை மருத்துவர்கள்,விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு
நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது..

” தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில்
இன்று 150 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இந்தியாவிலேயே ஒரே நாளில் நாய்களுக்கு 50ல் இருந்து 66 கருத்தடைகள் தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது.
விலங்குகள் நல வாரிய விதிமுறைகள் படி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை
செய்வதால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், மற்ற நாடுகளில் இருப்பது போன்று
எந்த நாய்களையும் அப்புறப்படுத்த முடியாது அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடித்ததற்கு பின்பாக நாய் கடி பிரச்சனைக்கு
தீர்வு காணும் விதமாக அனைத்து அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களுடன் சேர்ந்து
ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அண்மைக்காலமாக முறையான சான்றிதழ்களை பெறுவது கிடையாது. பாதுகாப்பற்ற முறையில் செல்லப்பிராணி வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது என்பதை தெரிவித்தும் அதனை நாயின் உரிமையாளர்கள் பின்பற்றுவது கிடையாது.
செல்லப் பிராணிகளை நம் வெளியே அழைத்துச் செல்லும் போது சாதகமான சூழல்
இருந்தாலும் மற்றவர்களுக்கு பாதகம் விளைவிக்கும் போது நம் கூடுதல் கவனத்தோடு
இருக்க வேண்டும். அனைவருக்கும் சட்ட விதிமுறைகள் மட்டுமே கூறிக் கொண்டிருந்தால் நாய்க்கடி விவகாரத்திற்கு தீர்வு கிடைக்காது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிறகு எந்தெந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டு வரலாம் என நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.

சென்னையில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளது , தமிழ்நாடு
கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து அடுத்த ஒரு மாதத்தில்
சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நாய்கள் கணக்கெடுப்பு
செய்யப்பட்டுள்ளது.

நாய்க்கடி பாதிக்கப்பட்டு சென்னையில் ஆண்டு ஒன்றுக்கு 20 ஆயிரம் நபர்களுக்கு
முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாய்களுக்கு முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிட மாநகராட்சியிடம் அதிகாரம் இல்லை கயிறு கட்டி வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே கூற முடியும் .  நாய்க்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே முகக் கவசம் அணிய வேண்டும் என விதிமுறைகள் உள்ளது.

நாய் ஆர்வலர்கள் நாய் கடிக்காது என கூறுவது தவறான கருத்து. நாய் வளர்ப்பவர்களை
நாய் கடிக்காமல் இருக்கலாம் பொது இடங்களுக்கு செல்லும்போது தெரு நாயாக
இருக்கட்டும் செல்லப் பிராணிகளாக இருக்கட்டும் மற்றவர்களை கடிக்கக்கூடும்
எனவே உரிமையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்”  என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags :
Advertisement