For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெல்லையப்பர் கோயிலில், வெகுவிமரிசையாக நடைபெற்ற நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்!

02:58 PM Jan 20, 2024 IST | Web Editor
நெல்லையப்பர் கோயிலில்  வெகுவிமரிசையாக நடைபெற்ற நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்
Advertisement

திருநெல்வேலியில் நெல்லையப்பர்- காந்தியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில். இக்கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தைப்பூச திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்திலிருந்து தினமும் காலை, மாலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார். அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோயிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் நேற்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன.  இந்த திருவிளையாடல் நிகழ்ச்சியை தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும், வேதபட்டர் மற்றும் பாண்டியமன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
Advertisement