Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாட்டில் அடுத்த 2 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம்!

04:45 PM Apr 15, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது.  இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.  மன்னார் வளைகுடா பகுதிகிளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  ஏப்ரல் 15, 16 ஆகிய தேதியகளில் தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  தமிழ்நாட்டில் ஏப்.15 முதல் 19 வரை ஐந்து நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.  இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.

வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.  சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Heatsummertamil naduTemperatureWeatherWeather Update
Advertisement
Next Article