தொடர்ந்து 2-வது முறையாக தங்கம் வென்ற #SumitAntil - யார் இவர்?
தொடர்ந்து 2-வது முறையாக பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் சுமித் அன்டில். இவர் யார்..? இவர் கடந்து வந்த பாதை என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் வீசி சுமித் அன்டில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது .
தங்கமகன் சுமித் அன்டில் யார்?
- சுமித் அன்டில் 1998ம் ஆண்டு ஜூன் மாதம் ஹரியானாவில் பிறந்தார். இவருக்கு மூன்று
சகோதரிகள் உள்ளனர். - இவரது தந்தை ராம் குமார் அன்டில் விமானப் படையில் பணிபுரிந்தபோது உயிரிழந்ததார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவர் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டார்
- மல்யுத்த விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இவர் ராணுவத்தில் வேலைக்கு சேர நினைத்தார்.
- மேல்நிலைப்பள்ளி படித்துக் கொண்டிருக்கும்போது டியூசன் சென்று திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் அவரது கால் துண்டாகி அவரது மல்யுத்த கனவு முடிவுக்கு வந்தது.
- இதன் பின்னர் கல்வியை தொடர்ந்த அவர் டெல்லியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பாரா தடகள வீரரான ராஜ்குமாரால் பாரா-தடகளத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
- 2017 ஆம் ஆண்டில் தனது பயிற்சியைத் தொடங்கினார் . மேலும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து நேஷனல் சர்க்யூட்டில் ஈட்டி எறிதலில் போட்டியிடத் தொடங்கினார். அதன் பின்னர் பாரா சாம்பியன்ஸ் திட்டத்தில் சேர்ந்தார்.
- 2020ல் டோக்கியோவில் நடைபெற்ற இந்திய ஓபன் நேஷனல் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சுமித் அன்டில் 68.62 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் 70.59 மீட்டர் வீசி தனது முந்தைய சாதனையை முறியடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
விருதுகள்
- 2021 – கேல் ரத்னா விருது ,
- 2022 – பத்மஸ்ரீ விருது ,
- 2024 - ஸ்போர்ட்ஸ்டார் ஏசஸ் விருதுகள்
- 2024 - ஃபோர்ப்ஸ் இந்தியா