Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென் திருவண்ணாமலையில் தயார் செய்யப்பட்ட மகாதீப கொப்பரை!

07:14 PM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

 தீபத்திருநாளை முன்னிட்டு, உசிலம்பட்டி அருகே தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் கோயிலின் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரையை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை
வாய்ந்த திடியன் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் மற்றும் தங்கமலைராமன்
திருக்கோயில். தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் இந்த திருக்கோயிலின் மலை உச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, மகாதீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நாளை கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றுவதற்கான தீபக் கொப்பரையை தயார் செய்யும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். கொப்பரையை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைத்து மலர் மாலை சூட்டி தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து, நாளை காலை 9 மணியளவில் இந்த கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச்
செல்லப்பட்டு 100 மீட்டர் துணி, 200 லிட்டர் நெய் மூலம் மகாதீபம் ஏற்றும் பீடத்தில் வைத்து தீபம் ஏற்ற தயார் செய்யப்படும் எனவும், சரியாக மாலை 6 மணிக்கு மலை உச்சியில் உள்ள தங்கமலை ராமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபம் ஏற்றப்படும் எனவும் கோவில் நிர்வாக கமிட்டியினர் தெரிவித்தனர்.

Tags :
Deepa ThirunalDevotionMaduraiMahadeepamNews7Tamilnews7TamilUpdatesThidiyan Kailasanathar Periyanaiaki Amman and Thangamaliraman Temple
Advertisement
Next Article