சிவகங்கையில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் - பேண்ட் இசைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு!
சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம்முறை திருத்த முகாம் நடைபெற்று வரும் நிலையில் பேக்பைபர் இசைக்கருவியை இசைத்து எல்கை பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்கள் மத்தியில் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் டிசம்பர்ம் 9 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த
முகாம் நடப்பதாக அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள்
புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் சரிபார்த்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த முகாம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தோ தீபெத் எல்கை பாதுகாப்பு படையுடன் இனைந்து நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதில் இந்தோ - திபெத் எல்கை பாதுகாப்பு படை வீரர்கள் 'பேக்பைபர்' எனும் இசை கருவிகளை இசைத்து ஊர்வலமாக வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேக் பைபர் கருவி இசைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை பொது மக்கள் வெகுவாக வரவேற்றனர்.
ரா.கௌரி