பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப்பில் செய்தியை பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை!
பாகிஸ்தானில் முஹமது நபியை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தாலோ, அவமதித்தாலோ, மத நிந்தனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் 22 வயதான மாணவர் முகமது நபி பற்றி இழிவான வார்த்தைகள் கொண்ட வீடியோக்களை உருவாக்கியுள்ளார். இதனை 17 வயதான மாணவன் பகிர்ந்துள்ளான்.
இந்நிலையில் இரண்டு மாணவர்களும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், 22 வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதேபோல 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை தெரவித்துள்ளார்.