For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜம்மு - காஷ்மீரில் பின்னுக்கு தள்ளப்பட்ட முன்னாள் முதல்வர்கள்!

12:52 PM Jun 04, 2024 IST | Web Editor
ஜம்மு   காஷ்மீரில் பின்னுக்கு தள்ளப்பட்ட முன்னாள் முதல்வர்கள்
Advertisement

ஜம்மு - காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா,  மெகபூபா முப்தி ஆகியோர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது.  543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  அதன்படி நண்பகல் 12.50 மணி நிலவரப்படி  பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

பின்னர் மற்ற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.  அதன்படி, பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா 95,996 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் 2,00,883 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதேபோல்,  அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி 1,92,525 வாக்கு வித்தியாசத்தில் பின்னிலையில் உள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளர் மியான் அல்தாஃப் அஹ்மத் 3,63,083 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.  ஜம்மு - காஷ்மீரில் உள்ள 5 மக்களவைத் தொகுதியில் பாஜக 2 தொகுதியிலும், தேசிய மாநாட்டு கட்சி 2 தொகுதியிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

Tags :
Advertisement