நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ. 57,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாகவே தங்கம் விலை அவ்வப்போது ஏறும், இறங்கும். ஆனால், கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57,000 கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58,000 என்ற நிலையையும் தாண்டியது. மேலும், தங்கம் விலை கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரம் ரூ.59,000 கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
இதையடுத்து, நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ. 7,365க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 58,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள் : #ProKabaddiLeague | யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி!
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.