Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புனித நீராடும் பண்டிகை: 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழப்பு… #Bihar -ல் சோகம்!

04:49 PM Sep 26, 2024 IST | Web Editor
Advertisement

பீகாரில் ஜிவித்புத்ரிகா விழாவில் ஆற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஜீவித்புத்ரிகா பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது, தங்களுடைய குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் கடைப்பிடிப்பது, பின்னர் குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். இந்த பண்டிகையின்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் பீகாரில் உள்ள கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சார், சிவான், ரோத்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நீரில் மூழ்கி 43 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 37 பேர் குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள் : TVK முதல் மாநாடு குறித்து ஆலோசனை! பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு!

அதில், மூன்று பேரின் உடல்கள் காணவில்லை, அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதுவரை 43 உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என பேரிடர் மேலாண் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

Tags :
46 peopleBiharIndiaJivitputrika festivalNews7Tamilnews7TamilUpdatesriver
Advertisement
Next Article