For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பதிவான வாக்குகள் அத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததா?

04:00 PM Jun 11, 2024 IST | Web Editor
2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பதிவான வாக்குகள் அத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததா
Advertisement

This News Fact Checked by ‘The Quint

Advertisement

வாரணாசியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட பதிவான வாக்குகளில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறும் நபரின் பழைய வீடியோ 2024 தேர்தல்களுடன் தவறாக இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வைரல் வீடியோவில் கூறப்பட்ட கூற்றுகள் தவறாக வழிநடத்துவதாக தேர்தல் ஆணையத்தின் X-பக்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வாரணாசியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) எண்ணப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக ஒரு நபரின் வீடியோ 2024 மக்களவைத் தேர்தலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோவின் சாராம்சம்:

வாரணாசி தொகுதியில் சுமார் 11 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் அந்த தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரம் என கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியின் தொகுதியில் மட்டுமல்ல பிற 373 தொகுதிகளிலும் இது நடந்தது என்றும் அவர் கூறினார்.

இந்த பதிவு 33,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. இதே போன்ற உரிமைகோரல்களின் காப்பகங்களை இங்கே , இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம் .

உண்மை என்ன?:

வீடியோ பழையது மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளது.

வாரணாசி தொகுதியில் கூடுதல் வாக்குகள் பற்றிய கூற்றுக்கள் தவறானவை என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) ஏப்ரல் மாத X பதிவு தெளிவுபடுத்துகிறது.

ECI தரவு என்ன காட்டுகிறது?:

ECI இணையதளத்தின்படி , 2024 வாரணாசி மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 11,30, 143.

இவற்றில் சுமார் 11,27,081 EVM வாக்குகளும், 3,062 அஞ்சல் வாக்குகளும் ஆகும்.

பிரதமர் மோடி 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கணக்கீடு ECI இன் இணையதளத்தில் கிடைக்கிறது.

(ஆதாரம்: ECI/ஸ்கிரீன்ஷாட்)

வீடியோவைப் பற்றி என்ன?:

ECI இன் அதிகாரப்பூர்வ X பக்கத்தை பார்க்கும்போது, ​​வைரல் வீடியோவிற்கான பதிலை கண்டறிந்தோம். அதில், வைரல் வீடியோ தவறாக வழிநடத்துகிறது மற்றும் அது போலியானது என்பதும் தெளிவானது.

இது 7 ஏப்ரல் 2024 அன்று வெளியிடப்பட்டது அதில், வைரலாகு பதிவு தவறாக வழிநடத்துகிறது மற்றும் அது போலியானது. வாரணாசியில் மொத்த வாக்காளர்கள் 18,56,791. மொத்தம் பதிவான வாக்குகள் EVM-10,58,744 மற்றும் அஞ்சல் வாக்குகள்-2085.

பரப்பப்பட்ட தகவல் :

2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது வாரணாசியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட பதிவான வாக்குகளில் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டது.

உண்மை:

வைரல் ஆன பதிவு தவறாக வழிநடத்துகிறது. அந்தோடு அந்த பதிவு போலியானது. வாரணாசியில் மொத்த வாக்காளர்கள் 18,56,791. EVM-ல் பதிவான வாக்குகள் 10,58,744 மற்றும் அஞ்சல் வாக்குகள்-2085

— இந்திய தேர்தல் ஆணையம் (@ECISVEEP) ஏப்ரல் 7, 2024

ECI இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவு:

தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வாக்காளர் எண்ணிக்கை ஆவணத்தால் இந்தத் தரவுப் புள்ளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன . அதில் மொத்தம் 18,56,791 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவற்றில் மொத்த EVM வாக்குகள் 10,58,744 ஆகவும், அஞ்சல் வாக்குகள் 2,085 ஆகவும் இருந்தது.

மொத்தம் 18,56,791 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

(ஆதாரம்: ECI/ஸ்கிரீன்ஷாட்)

வீடியோவில் உள்ள நபர் பற்றி:

வைரலான வீடியோவில் 'வாமன் மெஷ்ரம்' என்ற வாட்டர்மார்க் இருந்ததை நாங்கள் கவனித்தோம். இதைத் தொடர்ந்து, WebQoof குழு அதே பெயரில் ஒரு தேடலைச் செய்து X பதிவை கண்டறிந்தது .

மெஷ்ராம் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பின் (BAMCEF) தலைவராக பணியாற்றுகிறார்.

அந்த நபர் வாமன் மேஷ்ராம் என அடையாளம் காணப்பட்டார்.

(ஆதாரம்: எக்ஸ்/ஸ்கிரீன்ஷாட்)

முடிவு:

வாரணாசி மக்களவைத் தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளுக்கும் பதிவான வாக்குகளுக்கு உள்ள முரண்பாடுகள் பற்றி பேசும் வீடியோ 2024 பொதுத் தேர்தலுடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘The Quint’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement