கன்வாரியாத்திரை பாதைகளில் உள்ள உணவகங்களுக்கு முக்கிய உத்தரவு!
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கன்வாரியாத்திரை பாதைகளில் உள்ள உணவகங்கள் அனைத்தும் தங்களது லைசன்ஸ் மற்றும் ரிஜிஸ்ட்ரேஷன் விவரங்களை கடையின் முகப்புப் பகுதியில் அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது
இந்த உத்தரவு, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான அபூர்வானந்த் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது மனுவில், கன்வார் யாத்திரை பாதையில் உள்ள கடை உரிமையாளர்களின் விவரங்களை அறிய QR குறியீடுகளை அட்டவணைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு, விற்பனையாளர்கள் தங்களது அடையாளங்களை வெளியிட முடியாது என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்புக்கு எதிரானது என அபூர்வானந்த் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், QR குறியீட்டு கட்டாயம் தொடர்பான விவகாரம் குறித்து இப்போதைக்கு எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. இதன் மூலம், உணவு பாதுகாப்பு மற்றும் வணிக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மைக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்துள்ளது.