"டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்" - தேமுதிக வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் ஏக்கர் டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்க்கை கடனில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி, அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்க வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்றி, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய உதவிகளை உடனே வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டுமென தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.