For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF முடிவு!

பாகிஸ்தானின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு, அந்நாட்டிற்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவெடுத்துள்ளது. 
07:37 AM May 10, 2025 IST | Web Editor
பாகிஸ்தானின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு, அந்நாட்டிற்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவெடுத்துள்ளது. 
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க imf முடிவு
Advertisement

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் மோசமான சேதத்தை சந்தித்துள்ளது. இதனால் உலக வங்கியிடம் கூடுதல் கடன் தொகையை கோர பாகிஸ்தான் ஆலோசித்தது. இதனிடையே பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா அணுகியது.

Advertisement

இதனையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்குதான் பயன்படுத்தும் எனவும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் IMF விதிகளின்படி தீர்மானங்களுக்கு எதிர்த்து வாக்களிக்கும் (No Vote) செயல்முறை இல்லாததால், புறக்கணிப்பு முடிவை எடுத்தது இந்தியா. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பையும் தாண்டி பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்ய சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. இந்திய மதிப்பில் பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி வழங்க நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.

Tags :
Advertisement