For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நான் ரயில்வே அமைச்சர் இல்லை" - கூட்ட நெரிசலை பற்றி புகார் அளித்த பெண்ணுக்கு TTE பதில்!

11:23 AM Apr 15, 2024 IST | Web Editor
 நான் ரயில்வே அமைச்சர் இல்லை    கூட்ட நெரிசலை பற்றி புகார் அளித்த பெண்ணுக்கு tte பதில்
Advertisement

கூட்ட நெரிசல் மிகுந்த ரயில் குறித்து பெண் புகார் அளித்த போது 'நான் ஒன்றும் ரயில்வே அமைச்சர் இல்லை' என TTE தெரிவித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

மக்கள் கூட்டம் எப்போதும் ரயில்களில் அதிகமாக இருக்கும்.  ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும்  சமயங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்வர்.  இதனால், முன்பதிவு செய்தவர்கள் அவதிப்படுகின்றனர்.  இந்நிலையில்,  தற்போது ஒரு பெண் தனது குறைகளை பயண டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) கூறிய  வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள் : ஈரானுக்கு பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்?- ஆலோசனை கூட்டத்தில் நெதன்யாகு எடுத்த முடிவுகள் என்ன?

22969 OKHA BSBS SF EXP (Okha முதல் கான்பூர் சென்ட்ரல்) ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்,  நெரிசலான பெட்டிகளைப் பற்றி புகார் கூறினார்.  நடக்க கூட இடம் இல்லாத மற்றும் ஆண்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் பெட்டியில்,  பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும் என்று அந்த பெண் பயண டிக்கெட் பரிசோதகரிடம் கேள்வி எழுப்பினார்.  மேலும், அந்த பெண் குறைவான கூட்ட நெரிசல் உள்ள பெட்டிக்கு மாறிவிடுமாறு கேட்டுக்கொடண்டார்.

இது தொடர்பாக ரயிலின் உள்ளே நின்றிருந்த TTE கூறுகையில், “இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது.  நான் ஒன்றும் ரயில்வே அமைச்சர் இல்லை.  இதற்காக கூடுதல் ரயில்களை இயக்க முடியாது” இவ்வாறு இந்த TTE கூறினார்.

இதன் பின்னர் அந்த பெண் கூறுகையில்,  “நீங்கள் உங்கள் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள்.  பெண்கள் அல்லது பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி அல்ல” என்று அப்பெண் கூறினார். இ து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement