சட்டவிரோத ஐபிஎல் ஒளிபரப்பு வழக்கு - நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்!
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிப்பரப்பட்டது தொடர்பான வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சைபர் கிரைமில் புகாரளித்தது. இதுதொடர்பாக ஃபேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்றும், அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடிகை தமன்னா பாட்டியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.