Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அழைப்பு விடுக்காவிட்டாலும் விஜய்யின் #TVK மாநாட்டிற்கு செல்வேன்” - நடிகர் விஷால்!

07:12 AM Oct 21, 2024 IST | Web Editor
Advertisement

விஜய் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், வாக்காளராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாடு முழுவதும்
ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டு
அனைவருக்கும் விருதுகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால் :-

கோயிலுக்கு சென்று கடவுள்களை பார்ப்பதை விட, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு
மறுவாழ்வு அடைந்தவர்களை பார்ப்பது அபூர்வமான விஷயம். நமது நாட்டிலேயே ஆசிட் வீச்சால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார்கள். ஆசிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி கூட பார்க்க முடியாமல் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் வெளியே வரவேண்டும். மனதில் இருந்து ஒருவருக்கு நல்லது நினைப்பது தான் அழகு. இதுபோன்ற அழகானவர்களுக்கு விருது கொடுப்பதுதான் பெருமை.

தேசிய விருதுகளை விட, இதுபோன்ற விருதுகள் தான் எனக்கு முக்கியம். இது போன்ற
விருதுகள் மேல்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆசிட் பாதிப்புக்கு பிறகு பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பெரிய அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். நடிகராக இருந்ததால் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இது போன்ற பெண்களுக்கு மத்தியில் நிற்க வாய்ப்பு கிடைத்தது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட டெல்லியில் இருந்து வந்த பெண் என்னோடு நடிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவருடன் நடிப்பேன். ஒரு வாக்காளராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்வேன். அழைப்பு விடுக்காமலே தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு செல்வேன். இப்போ இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, அவர் என்ன நல்லது செய்யப் போகிறார் என்று தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன்.

மாநாட்டிற்கு அழைப்பு தேவையில்லை. மாநாட்டிற்கு எங்கேயாவது ஒரு ஓரத்தில் நின்று
அவர் என்ன பேசப்போகிறார் என்று பார்ப்பேன். புது அரசியல்வாதி வருகிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும். அதைக் கேட்க வேண்டும். அதை ஏன் தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும். நேரடியாகவே சென்று பார்த்தால் நல்லது தான். அதற்காக மாநாட்டிற்கு செல்வேன்.

அவருடைய கருத்து, அவர் என்ன மக்களுக்கு கூறப் போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே
மாநாட்டுக்கு செல்வேன். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் கூற முடியாது. முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும். விஜய் முதல் அடி வைக்கட்டும், அவர் என்ன செய்யப் போகிறார் ? அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் கட்சியில் இணைவேனா என்பது குறித்து
முடிவெடுக்க முடியும்.

தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நானும் ஒரு அரசியல்வாதி தான். சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள்
தான். தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த நிரூபரின் கேள்விக்கு, அவங்கவங்க பிரச்சனை; அவங்கவங்க கருத்து; அவங்க சர்ச்சை ; அவரவர் திணிப்பு. அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை” என தெரிவித்தார்.

Tags :
Faces Campaign 2024tvkTVK Vijayvijayvishal
Advertisement
Next Article