Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - பிரபலங்கள் நேரில் அஞ்சலி..!

09:46 PM Jan 26, 2024 IST | Web Editor
Advertisement

இளையராஜா மகள் பவதாரிணியின் மறைவையொட்டி அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் பவதாரிணி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். இவர் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்த மிக சொற்பமான பெண் இசையமைப்பாளர்களில் பவதாரிணியும் ஒருவர். இவர் ‘பாரதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருதை பெற்றார்.

பவதாரிணி அழகி, புதிய கீதை, கோவா, அனேகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில், சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக இலங்கைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில்,  அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

பவதாரிணியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர், இயக்குநர் செல்வராகவன், நடிகர் விஷால் உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த பாடகி பவதாரிணியின் உடல் இன்று மாலை விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர்.

நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகர் மனோ, சுதா கோங்குரா, காயத்திரி ரகுராம், நடிகர் சிவக்குமார், நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் உயிரிழந்த பாடகி பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இயக்குனர் வெற்றிமாரன், தயாரிப்பாளர் ஆர் பி சவுத்திரி , நடிகர் சேரன், நடிகை ராதிகா சரத்குமார், இயக்குனர் மோகன் ராஜ், நடிகர் விஜய் ஆன்டனி, நடிகர் ஆனந்த் பாபு, நடிகர் கார்த்தி மற்றும் விஷால், நடிகை ஶ்ரீ வித்யா, நகைச்சுவை நடிகர் சதிஷ், நடிகர் பாக்கியராஜ், ஏ.ஆர்.ரஹ்மானின் மற்றும் அவருடைய மகன் ஏ.ஆர்.அமீன், நடிகர் சூரி, இயக்குனர் அமீர்,நடிகர் சிம்பு, நடிகர் சிவா, இயக்குனர் ராம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பேரரசு மற்றும் செல்வமணி, உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பாடகி பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் இயக்குனர் பாக்கியராஜ் பேட்டி அளித்தார்.

"குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள் பொம்மை என்று சொல்வார்கள் ஆனால் கடவுளுடைய விளையாட்டு பொம்மைகள் மனிதர்கள். இவ்வளவு திறமைகள் இருந்து சின்ன வயதில் பவதாரணி போன்றவர்களை கூட்டிக் கொள்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். பவதாரணி ஆன்மா சாந்தி அடைய வேண்டும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்"  என தெரிவித்தார்.

இயக்குநர் சீனுராமசாமி பேட்டி

"இசை உலகிற்கு மிக பெரிய பேரிழப்பு. இசை மேதையின் குழந்தை என்றில்லாமல் மிக எளிமையானவர் பவதாரணி, அவரது இறப்பு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்"

நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி:

"முதலில் அம்மா இழப்பு பேரிழப்பு. தற்போது பவதாரணி இழப்பு. ராஜா சாருக்கு யுவனுக்கு கடவுள் சக்தி கொடுக்கனும்.இவ்வளவு பிரச்சனை இருந்தும் அவர் கத்திக்கூட பேசியதில்லை.என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஆழ்ந்த இரங்கல்"

இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா பேட்டி:

"மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலை நேரங்களில் பவதாரணியை பார்த்து பயப்படுவேன். அதலாம் ஒன்றுமில்லை பயப்படாதீங்கனு சொல்லுவாங்க. சத்தமா கூட பேசமாட்டாங்க. அவங்க குரல் உலகம் எல்லாம் ஒலித்தாலும் அவர் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும்‌" இவ்வாறு ஸ்ரீகாந்த் தேவா கூறினார்.

Tags :
BhavathariniIlaiyaraajaDaughterIlaiyarajaRIPBhavatharinisingerBhavadharani
Advertisement
Next Article