Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்!

05:36 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் நடப்பாண்டில் ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடத்தை தக்கவைத்து அசத்தியுள்ளது.

Advertisement

நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இதற்காக என்.ஐ.ஆர்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்கள், மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளாக தரவரிசைப்படுத்தி அறிவித்து வருகிறது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் 2024-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், ஐஐடி சென்னை முதலிடமும், இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு இரண்டாமிடத்தையும், ஐஐடி மும்பை மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் ஐஐடி சென்னை தொடர்ந்து 9 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

Tags :
Chennaimadras iitMinistry Of Educationnews7 tamilNews7 Tamil UpdatesNIRFRankings
Advertisement
Next Article