Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மரணத்தோட விளையாட நினைச்சா நிலைமை ரொம்ப விபரீதமாயிடும்”- ‘Final destination bloodlines’ படத்தின் டீசர் டிரெய்லர் வெளியானது!

பைனல் டெஸ்டினேஷன் பாகம்-6 படத்தின் டீசர் வெளியானது.
02:08 PM Feb 04, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 2000-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படமான பைனல் டெஸ்டினேஷன் முதல் பாகம்  வெளியானது. இதில், அலி லார்டர், டோனி டோட், டெவோன் சாவா, கெர் ஸ்மித், சீன் வில்லியம் ஸ்காட் மற்றும் மேரி எலிசபெத் வின்ஸ்டெட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisement

அதனைத்தொடர்ந்து, இதுவரை இதன் 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 'பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்' என்ற 6-வது பாகம் உருவாகி உள்ளது. இதில் மறைந்த நடிகர் டோனி டோட், பிரெக் பாசிங்கர். தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இப்படம் வரும் மே மாதம் 16-ம் தேதி வெளியாகும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Final Destination BloodlinesHollywood
Advertisement
Next Article