Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இபிஎஸ்-ஐ கண்டால், அம்பேத்கர் யாரென்றாவது அவருக்கு தெரியுமா என்று கேட்டு சொல்லுங்கள்” - அமைச்சர் ரகுபதி!

03:16 PM Dec 19, 2024 IST | Web Editor
Advertisement

சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவைக் கண்டிக்காமல் பதுங்கு குழியில் பதுங்கியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

எங்கே பழனிசாமி?

“அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள். சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார்.

மத்திய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.

யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள், அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
ADMKAmitShahDMKedappadi palaniswamiEPSlaw ministerRegupathy
Advertisement
Next Article