“கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே” - பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே!
09:33 PM May 31, 2024 IST
|
Web Editor
“அரசியலையும், மதத்தையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது. அது இரண்டுமே தனித்து தான் இருக்க வேண்டும். ஒரு மதத்தை சேர்ந்தவர் உங்கள் பக்கம் இருக்கலாம். மற்றொரு மதத்தை சேர்ந்தவர் உங்களுக்கு எதிராக இருக்கலாம். அதனால் மதம் சார்ந்த உணர்வுகளையும் தேர்தலையும் இணைப்பது என்பது தவறானது.
Advertisement
“கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே. ஏன் இந்த நாடகம்”? என பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே.
Advertisement
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இதனை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே விமர்சித்துள்ளார். ஆங்கில செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேசிய அவர்,
தனது வீட்டிலேயே தங்கி 45 மணி நேரம் தியானம் செய்திருக்கலாமே? கன்னியாகுமரிக்குப் போக வேண்டிய அவசியம் என்ன? பத்தாயிரம் காவல்துறையினர், கன்னியாகுமரியில் அவரது பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். ஏன் இந்த நாடகம்? கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே” என தெரிவித்துள்ளார்.
Next Article