For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற 5 ஆண்டுகள் ஆகும்!” - கவிஞர் வைரமுத்து

10:23 AM Apr 18, 2024 IST | Web Editor
“பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற 5 ஆண்டுகள் ஆகும் ”   கவிஞர் வைரமுத்து
Advertisement

பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்.  சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் நாளை (ஏப். 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலையோடு முடிவடைந்தது.  இந்நிலையில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து முக்கிய தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையமும் தனது பங்குக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கவிஞர் வைரமுத்து வாக்களிப்பது குறித்து தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

வைரமுத்துவின் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும்

பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால்

அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்

சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement