விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!
மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்
தேசிய பாதுகாவலர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
தனியார் செக்யூரிட்டியில் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும்
உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இதையும் படியுங்கள்: ஒற்றை கரப்பான் பூச்சியைக் கொல்லும் முயற்சியில் தன் வீட்டையே வெடிக்க வைத்த நபர்!…
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சைலேந்திரபாபு பேசும்போது கூறியதாவது:
தமிழ்நாட்டில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து
வருவதாகவும், ஆனால் காவல் துறையால் முழுமையாக போதை பொருட்களை ஒழிக்க முடியாது. காவல்துறையின் கெடுப்பிடியால் போதை பொருட்களின் விலை அதிகரிக்கும்.
இதனால் போதை பொருளின் தேவையை சமுதாயத்தில் குறைக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் முயற்சி செய்ய வேண்டும். மேலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்கள் போதையில் இருந்து வெளி வருவார்கள் எனவும்
தெரிவித்தார்.