Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அரசியலமைப்பின்கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?" - #SupremeCourt  கேள்வி

12:17 PM Aug 20, 2024 IST | Web Editor
Advertisement

"பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாள மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகள் தாக்கப்படுவதை தடுக்கவும் தனியாக சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் சட்டத்தால் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை அவதூறாக பேசக்கூட சிந்திக்கா வண்ணம் இருக்க வேண்டும் என பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது, "பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் இல்லாதது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம்.

ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கான தனி ஓய்வு மற்றும் பணி அறை மற்றும் பாதுகாப்பான பணி சூழல் தொடர்பாக ஒருமித்த நடைமுறையை நாம் உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, "பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் அறிந்த பின்னர் மருத்துவமனை நிர்வாகம் தற்கொலை என மூடி மறைப்பதற்கு பார்த்துள்ளது? தலைமை நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags :
CBIKolkata DoctorKolkata Doctor Murder CaseSupreme court
Advertisement
Next Article