Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் எதிர்த்து போட்டி - நடிகர் மன்சூர் அலிகான்!

10:40 AM Jan 10, 2024 IST | Web Editor
Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் எதிர்த்து தான் போட்டியிடுவதாக நடிகர் மன்சூர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தேனியில் டிடிவி.தினகரன் போட்டியிட்டால் எதிர்த்து நான் போட்டியிடுவேன். 1999-ம் ஆண்டு புதிய தமிழகம் சார்பில்,  கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன்,  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரால் வெற்றி பெற்றார். ஆனால் அவரை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும். நான் அவரது மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன்.

எப்படி ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, அவரிடம் நயவஞ்சகம் செய்து, மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து ஜெயலலிதாவை நாடகமாடி, ஆளுநர் உட்பட யாரையும் பார்க்கவிடாது மாய்த்த கொடூரத்தை எடுத்து சொல்ல, மக்களோடு மக்களாக நின்று 1999-ம் ஆண்டு, நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். இது சத்தியம். எந்த ஆளான கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி.”

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.

Tags :
AIADMKammkMansoor AliKhanNews7Tamilnews7TamilUpdatesPuthiya TamilagamThenittv dinakaran
Advertisement
Next Article