For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்" - நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

11:09 AM Jan 15, 2024 IST | Web Editor
 சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக  சந்தோஷமாக இருக்கும்    நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : அவனியாபுரத்தில் விறுவிறுப்பு: சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு பரிசாக காத்திருக்கும் கார்!

மேலும், தைத்திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக் கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.  அப்போது நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்" என கூறினார்.

Tags :
Advertisement