“மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்” - முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 11வது நாளான இன்று, சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,
“கரசூர் பகுதியில் தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் தொழில் முனைவோர்களுக்கு இடம் பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பல்வேறு தொழிற்சாலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் உருவாகியுள்ளது. புதுச்சேரியில் single window system இருந்தும், புதிய தொழிற்சாலைகள் அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படுவதுதான் உண்மையான நிலை.
ஒரு சிலர் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுப்பதற்கு அல்லோலப் படுகிறோம். தலைமை செயலர் முடிவு எடுத்தால் தான் கோப்பு தனக்கு வருகிறது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முழுமையான அதிகாரம் வேண்டுமென்றால் மாநில அந்தஸ்து வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரி மாநிலம் பின் தங்கிய நிலையிலேயே இருக்கும்” என தெரிவித்தார்.
Single window system என்றால் ஒற்றை சளார முறை.
ஒற்றைச் சாளர முறை என்பது, ஒரு மாநிலம்/நாட்டில் வணிகத்தை அமைப்பதற்கான உரிமங்கள், அனுமதிகள் மற்றும் பிற தேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள விரைவாகவும், எளிதாகவும் அனுமதி பெறும் ஒரு கணினி அமைப்பாகும்.