“பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” - உச்சநீதிமன்றம்!
வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்கள் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, தனது மகன் சரியாக கவனிக்கவில்லை எனவே, மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும், சொத்துகளுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் ம.பி. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், “வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற காரணத்துக்காக தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது. பிள்ளைகள் கவனிக்காவிட்டால், தானப் பத்திரம் செல்லாது என எந்த நிபந்தனையையும் மனுதாரர் விதிக்கவில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது” என வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அந்தப் பெண் மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற விசாரணை, நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. விசாரணை முடிந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
“சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து ம.பி. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த சூழலில், பிள்ளைகள் கவனிக்காமல் விட்டால் ‘பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்’ சட்டத்தின்படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்கலாம்.