Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது" - சீமான் ஆவேசம்!

10:36 AM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால், தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள்? என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

Advertisement

ஈரோட்டில் தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் சார்பில்
நடத்தப்படும் தமிழ்ப் பண்பாட்டு கண்காட்சியை நாம் தமிழர் கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

திராவிடம் என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொதிக்கின்றனர். ஆனால், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் வைத்திருப்பதற்கு ஒருவருக்கும் கோபம் வரவில்லை. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால், தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள்?

வரலாற்றில் ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய் என்று உள்ளது. திராவிடத்தை வேண்டுமென
நுழைத்து விட்டு 3% உள்ள பிராமணர்களை வைத்து, 30%திராவிடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். மாநில தன்னாட்சி பேசி வந்த நிலையில் கல்வி, மொழி, வரி, மருத்துவம் போன்ற அனைத்து
உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிக்கொடுத்துவிட்டு மாநில உரிமைகளை பற்றி பேசுவது என்ன நியாயம்? தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று சொல்வதற்கு நாங்கள் தயார். அதேபோல், திராவிடம் என்றால் என்னவென்று சொல்ல யாரேனும் தயாராக உள்ளனரா?

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம், தமிழகத்தின் நாகரிகம் என்று தான்
சொல்கிறது. ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று
சொல்கிறார்கள். ஆளுநரை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் திட்டமிட்டே திமுக இதைக் கையில் எடுத்து செய்து வருகிறது. ஒருவேளை ஆளுநரை மாற்றிவிட்டால், நாங்கள் கொந்தளித்ததால்தான் மாற்றினார்கள் என்று திமுகவினர் சொல்வார்கள்.

தீபாவளிக்கு தற்காலிகமாக 1500 மதுக்கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதை திசை திருப்பவே தாய்த் தமிழ் வாழ்த்துப் பாடலில் திராவிடம் விடுபட்டுவிட்டது என பெரிதாகப்பட்டுள்ளது. ஹிந்தியை எதிர்க்க அருகதை, தகுதி இல்லை. ஹிந்தியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் நுழைய விட்டது திராவிட ஆட்சிகள் தான்.

ஹிந்தியை திணித்த காங்கிரஸுடன் அரசியல் லாபத்திற்காக கூட்டணி வைத்ததால், எந்த
எதிர்ப்பும் இல்லாமல் ஹிந்தி தமிழகத்தில் வந்துவிட்டது. இப்போது வட மாநிலத்தவர்கள் ஒன்றரைக் கோடி பேர் உள்ளார்கள். தமிழ்த்தாய் பாடலில் உடன்பாடு இல்லை. நான் ஆட்சிக்கு வந்தால் திறமையான பாவலர்களை வைத்து நல்ல பாடல்களை எழுதுவேன். தமிழ்நாட்டில் எப்போதோ அரசியலில் ஆன்மிகம் கலந்து விட்டது.

யானை என்ன ஒரு கட்சிக்கு மட்டும் தான் சொந்தமா? இதையெல்லாம் விஜய்
கண்டுக்கொள்ள மாட்டார். 5 நாட்களில் நீக்கவில்லை என்றால் சட்டம் நீக்கிவிடுவமா?
தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தான் புகழ்பெற்ற விஜயை இடையூறு செய்து
வருகிறார்கள்.

நடிகர் விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும், அவரை ஆதரிப்பேன். ஏன் என்றால்
அவர் என்னுடைய தம்பி. சேலத்தில் திமுக மாநாடு நடத்தும் போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால் விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்? என சீமான்ஆவேசமாக பேசியுள்ளார்.

Tags :
தமிழ்த்தாய் வாழ்த்துNTKSeemanTamil Thai VazhthuTN Govt
Advertisement
Next Article