For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”என் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் நானே நடிக்க தயார்” -#RahulDravid!

09:01 AM Aug 23, 2024 IST | Web Editor
”என் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் நானே நடிக்க தயார்”   rahuldravid
Advertisement
தன் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் நானே நடிக்க தயார் என் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான்.

Advertisement

இந்நிலையில் டிராவிட்டை தங்கள் ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக்க பல அணிகள் முயற்சி செய்து வருகின்றன. வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் பயோபிக்குகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராகுல் டிராவிட்டிடம் உங்கள் பயோபிக்கை எடுத்தால் அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்கபட்டது.

அதற்கு அவர் “சம்பளம் நிறைவாக இருந்தால் நானே நடித்துவிடுகிறேன்” என ஜாலியான பதிலை அளித்துள்ளார். சமீபத்தில் யுவ்ராஜ் சிங்கின் பயோபிக் ‘சிக்ஸ் சிக்ஸர்ஸ்’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :
Advertisement