“இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” - உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!
தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,
“நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தால் அவர்கள் தங்கள் மதச் செயல்களை எல்லாம் செய்ய சுதந்திரம் இருக்கும். ஆனால் 100 முஸ்லிம் குடும்பங்களில் 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?, இல்லை. வங்கதேசம் ஒரு உதாரணம். இதற்கு முன்பு, பாகிஸ்தான் ஒரு உதாரணம். ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? நாம் தாக்கப்படுவதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், அவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். 2017க்கு முன்பு உ.பி.யில் கலவரங்கள் நடந்திருந்தால், இந்து கடைகள் எரிக்கப்பட்டதால், முஸ்லிம் கடைகளும் எரிந்திருக்கும். இந்து வீடுகள் எரிக்கப்பட்டதால் முஸ்லிம் வீடுகளும் எரிந்திருக்கும். 2017க்குப் பிறகு, கலவரங்கள் நின்றுவிட்டன.
நான் ஒரு சாதாரண குடிமகன், உத்தரப் பிரதேச குடிமகன். நான் அனைவரின் மகிழ்ச்சியையும் விரும்பும் ஒரு யோகி. அனைவரின் ஆதரவையும், வளர்ச்சியையும் நான் நம்புகிறேன். சனாதன தர்மம் உலகின் மிகப் பழமையான மதம் மற்றும் கலாச்சாரம். அதன் பெயரிலிருந்தே நீங்கள் யூகிக்க முடியும். சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றவர்களை தங்கள் நம்பிக்கைக்கு மாற்றவில்லை.
ஆனால் அதற்கு ஈடாக அவர்கள் என்ன பெற்றார்கள்?, அதற்கு ஈடாக அவர்கள் என்ன பெற்றார்கள்?. உலகில் எங்கும் இந்து ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த பலத்தைப் பயன்படுத்தி, மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதற்கு உதாரணம் இல்லை” என தெரிவித்துள்ளார்.