For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக 200 இடங்களில் வெல்ல வேண்டுமெனில் மக்கள்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் - தனியரசு பேட்டி!

02:04 PM Dec 23, 2024 IST | Web Editor
திமுக 200 இடங்களில் வெல்ல வேண்டுமெனில் மக்கள்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும்   தனியரசு பேட்டி
Advertisement

2026 தேர்தலில் திமுக 200 இடங்களில் வெல்ல வேண்டும் எனில் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் முன்னாள் காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேடிய தனியரசு ” நெசவாளர்களுக்கும் தனி சங்கம் மற்றும் அரசியல் கட்சி தேவை என்றும் அதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்த தனியரசு தெரிவித்ததவாது..,

“ பல ஆண்டுகளாக நெசவாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கூலி உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும். 60 வயது கடந்த மூத்த நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு புறக்கணித்தால் நெசவாளர்களைத் ஒன்று திரட்டி மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்படும்.

விவசாயத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையை ஜவுளி தொழிலுக்கும் அரசு வழங்கி
பஞ்சாலைகளையும் நூற்பாலைகளையும் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நீதிமன்றம் வருபவர்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்காவிட்டால் அதனை பாதுகாக்க மக்கள் போராட வேண்டிய நிலை ஏற்படும். நெசவாளர்கள் கோரிக்கை, வரி உயர்வு , மீனவர்கள் பிரச்னை இவற்றையெல்லாம் ஒழுங்குப்படுத்தினால் வரும் தேர்தலில் முதலமைச்சர் கூறியது போல் 200 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றாத பட்சத்தில் அவரின் விருப்பம் கனவாகிவிடும். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்” என தனியரசு தெரிவித்தார்.

Tags :
Advertisement