Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ்நாட்டில் 25 ஆண்டுகள் ஆனாலும் பிஜேபி ஆட்சிக்கு வரவே முடியாது!” - #SVeShekher

04:21 PM Nov 06, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பிஜேபி 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகர் எஸ்.வி சேகர் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டப்பிங் யூனியன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதோடு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அப்போது எஸ்.வி சேகர் பேசியதாவது:

தென்னிந்திய திரைப்பட டப்பிங் சங்கம், 1981-க்கு பிறகு தொடங்கப்பட்டு ராதாரவி
தலைமையில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. முதலில் டப்பிங் சங்கம் என்றனர். பின்னர் டப்பிங் மற்றும் நடிகர்கள் சங்கம் என்று மாற்றினார்கள். தொடர்ந்து சின்னத்திரை டப்பிங், சின்னத்திரை நடிகர்கள் சங்கம் என்று மாற்றினார்கள். ஒவ்வொரு முறையும் மாற்றி கொண்டு வருகிறார்கள்.

டப்பிங் யூனியன் கட்டிடம் 2 கோடிக்கு மேல் கட்டப்பட்டது. அது முறையாக இல்லை என நீதிமன்றம் கட்டிடத்தை இடிக்க சொல்லியது. ஆனால் திமுக அரசு இதை இடிக்க சொன்னதாக, ராதாரவி பாஜகவில் இருப்பதால் இதை அரசியலாக்க பார்க்கிறார். லேபர் கமிஷன் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டப்பிங் யூனியனில் டப்பிங் செய்ய ஏஜென்ட் 10% எடுத்துக் கொள்வார்.
கேட்டால் டிடிஎஸ் கட்டுவதற்கு என்று சொல்வார்கள். ஆனால் அதை கட்டவில்லை.

பன்னுக்கும், ஜாமுக்கும் பார்த்து பார்த்து டேக்ஸ் போடுபவர்கள், இவ்வளவு பெரிய
ஊழலுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. By law copy மாற்றப்பட்டதை எந்த உறுப்பினர்களுக்கும் அவர்கள் இன்னும் கொடுக்கவில்லை. இதுபோல் மாற்றம் செய்ய உள்ளோம், இதில் ஏதேனும் உங்களுக்கு பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் என்று தெரிவிக்கவில்லை. தொழிலாளர் நலத்துறை இதை அங்கீகாரம் செய்துவிட்டது. அது பற்றி பேசுவது தவறு.

அங்கீகாரம் கொடுத்த பிறகு, நீங்கள் அந்த டப்பிங் யூனியனுடன் இணைந்து
பணியாற்றங்கள் என்று சொல்லி கட்ட பஞ்சாயத்து செய்வது சரி அல்ல. அந்த லேபர் யூனியினில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சொல்லி நாளை இதுகுறித்து புகார் மனு அளிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் பிஜேபி 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. 2026 சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும். திமுக கொண்டு வந்துள்ள இந்த ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ஓட்டுகள் அவர்களுக்கு உள்ளது. விஜய் வந்திருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது. அந்த கூட்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உள்ளது.

காமராஜர் மெரினாவில் கூட்டம் நடத்தும் பொழுது, ஒரு லட்சம் பேர் கூடினர். ஆனால் அந்த தேர்தலில் தான் காமராஜர் தோற்றார். கூட்டத்திற்கும், வாக்குக்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுக vs அதிமுக மட்டும்தான். மற்றவர்கள் யாரும் இல்லை. தாக்கம் என்பது வேறு; ஆட்சி பிடிப்பது என்பது வேறு. விஜய்க்கு வயது இருக்கிறது. ஸ்டாலின் இப்போது முதலமைச்சராக இருக்கிறார் என்றால் மூன்று முறை தமிழக முழுவதும் சுற்றி இருக்கிறார். மன உறுதியோடு இருந்தால் செய்யலாம். ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. அண்ணாமலை வாயை திறந்தால் பொய்.

திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்?. அனைத்து ஓட்டுகளையும் திமுகவினர் போட்டார்களா?பிராமணர்களில் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள். தினசரி கூலி வேலை, கட்டிட வேலை புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள். EWS எந்த இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது அல்ல.

பொதுவெளியில் பேசும் பொழுது, என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல்
பேசக்கூடாது. கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் எதிர்காலம் இருக்கும். என்ன வேண்டுமானாலும் பேசலாம். பிராமணர் நல வாரியம் அமைப்போம் என்று திமுக அறிவித்தால், அவர்களுக்காக
பிரச்சாரம் செய்வோம். ஆனால் எந்த கட்சியிலும் சேர மாட்டேன். எந்த கட்சி இதைச்
சொன்னாலும் அதற்கு சார்பாக பிரச்சாரம் செய்வேன். யாராக இருந்தாலும் தனது சமூகத்திற்காக பேசுவது சரி. ஆனால் மற்ற சமூகத்தை குறைத்து பேசுவது தவறு.

முட்டைகோஸ் நாற்றத்தை விடவா, அசைவம் நாறப் போகிறது. உனக்கு வேண்டாம் என்றால் நீ
எடுத்துக் கொள்ளாதே. இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள். பாஜக என்ன சொன்னாலும் சரி என்று ஒரு பிரிவு சொல்கிறார்கள். ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாத்தையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் தமிழ்நாட்டு காரன், இந்தியாகாரன் என்று இருக்க வேண்டும்.

நான் பூணூல் போட்டுள்ளேன். ஆனால் அதை வரும் எல்லோருக்கும் மாட்டுவதா? தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி செய்திருக்கலாம். ஆனால் அது Reverse ஆகிவிட்டது. எல்லாரோடும் இணக்கமாக இருக்க வேண்டும். என் அப்பா அனாதை பிணங்களை அடக்கம் செய்துள்ளார். நானும் அதை செய்துள்ளேன். பிராமணன் என்று ஏன் சொல்ல வேண்டும்? அய்யர் என்று சொல்லட்டும். மற்றவர் செட்டியார், முதலியார் என்று சொல்லட்டும்.

என்று பள்ளிக்கூடத்தில் நீ என்ன ஜாதி என்று கேட்பதை நிறுத்துகிறார்களோ, அதுவரை ஜாதியை நிறுத்த முடியாது இது உண்மை. சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து, அது எனக்கு தவறாக முடிந்துவிட்டது. என்னை கட்சி அரசியலுக்கு கொண்டு வந்தது ஜெயலலிதா தான். வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது.

தேர்தலுக்கு இன்னும் 500 நாட்கள் வரை உள்ளது. அந்த நாட்கள் performence தான்
விஜய்யின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். விஜய் விஜய் என்று யார் பேசுகிறார்களோ அவர்கள் அவரை பார்த்து பயப்படுகிறார்கள் என்று அர்த்தம். விஜய் கட்சிக்கு யாராவது செல்வார்கள் என்றால், சீமான் கட்சியில் இருந்துதான் செல்வார்கள்.

உதயநிதி துணை முதல்வர் ஆனதில் என்ன தவறு. சினிமாவில் நடித்துவிட்டு அப்படியே
வந்து விடவில்லை. இளைஞர் அணியில் இருந்து ஒரே ஒரு செங்கலை வைத்து கட்சியை
ஜெயித்துக் கொடுத்திருக்கிறார். அவர் வரலாமா கூடாதா என்பதை திமுகவினர் தான் சொல்ல வேண்டும். மற்றவர் அல்ல. என் முகத்தில் தேவையில்லாத சாயத்தை மற்றவர்கள் பூசுவதை நான் விரும்பவில்லை” என்றார்.

Tags :
DMKPrahmin Brahmin AssociationS Ve ShekherTVK Vijay
Advertisement
Next Article