For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தியில் ராமர் சிலை: அதானி, அம்பானி உள்ளிட்ட 7,000-க்கும் மேற்பட்ட விஐபிகளுக்கு அழைப்பு!

01:12 PM Dec 07, 2023 IST | Web Editor
அயோத்தியில் ராமர் சிலை  அதானி  அம்பானி உள்ளிட்ட 7 000 க்கும் மேற்பட்ட விஐபிகளுக்கு அழைப்பு
Advertisement

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7,000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.  குறிப்பாக 2.27 ஏக்கர் பரப்பளவில் மூன்றடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து, இக்கோயிலின்  கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்ட உள்ளது. மேலும், ராமர் சிலைக்கு வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள மூலவர் குழந்தை ராமரின் சிலை 8 அடி உயரம், 3 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதையும் படியுங்கள் :  புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  இக்கோயில் நிர்வாகம்  மூலம் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. 7,000 க்கும் மேற்பட் தொழிலதிபர்கள் குறிப்பாக முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரத்தன் டாடா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள மதத் தலைவர்கள், முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதாளர்கள்,  ஹிந்து அமைப்பின் நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல், 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளாது.

Tags :
Advertisement