Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 இன்று தொடக்கம்!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இன்று பாக்கிஸ்தானில் தொடங்குகிறது.
07:16 AM Feb 19, 2025 IST | Web Editor
Advertisement

ஐசிசி நடத்தும் 50 ஓவர் கொண்ட 9வது சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்று வரை  புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த  சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு தகுதி பெற்றன.

Advertisement

இத்தொடரில் குரூப் ஏ குழுவில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய  அணிகளும் குரூப் பி குழுவில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டு குழுக்களிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இத்தொடருக்கான முதல் போட்டி பாக்கிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே  கராச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு  தொடங்கிறது. தொடர்ந்து நாளை இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடவுள்ளது.  இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறுகிறது. பாக்கிஸ்தானில் நடைபெறும் இத்தொடரில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணங்களால் துபாயில் நடக்கிறது.  இத்தொடர்  இந்தியாவில் ஸ்டார் நெட் ஒர்க் மற்றும் ஜியோஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பாகிறது.

சாம்பியன்ஸ் ட்ராபி அட்டவணை

பிப்ரவரி 19, பாகிஸ்தான் v நியூசிலாந்து, கராச்சி, பாகிஸ்தான்

பிப்ரவரி 20, வங்கதேசம் v இந்தியா, துபாய்

பிப்ரவரி 21, ஆப்கானிஸ்தான் v தென்னாப்பிரிக்கா, கராச்சி, பாகிஸ்தான்

பிப்ரவரி 22, ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, லாகூர், பாகிஸ்தான்

பிப்ரவரி 23, பாகிஸ்தான் v இந்தியா, துபாய்

பிப்ரவரி 24, வங்கதேசம் v நியூசிலாந்து, ராவல்பிண்டி, பாகிஸ்தான்

பிப்ரவரி 25, ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா, ராவல்பிண்டி, பாகிஸ்தான்

பிப்ரவரி 26, ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர், பாகிஸ்தான்

பிப்ரவரி 27, பாகிஸ்தான் v வங்கதேசம், ராவல்பிண்டி, பாகிஸ்தான்

பிப்ரவரி 28, ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர், பாகிஸ்தான்

மார்ச் 1, தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி, பாகிஸ்தான்

மார்ச் 2, நியூசிலாந்து v இந்தியா, துபாய்

மார்ச் 4, அரையிறுதி 1, துபாய்

மார்ச் 5, அரையிறுதி 2, லாகூர், பாகிஸ்தான்

மார்ச் 9, இறுதிப் போட்டி, லாகூர்

Tags :
Champions Trophy 2025CricketICCPAKvsNZTeam India
Advertisement
Next Article