For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐசிசி விருது 2023: சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி மற்றும் ஜடேஜா!

06:57 PM Jan 05, 2024 IST | Web Editor
ஐசிசி விருது 2023  சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி மற்றும் ஜடேஜா
Advertisement

2023-ம் ஆண்டின் சிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் (சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது) பரிந்துரையில் விராட் கோலி, பாட் கம்மின்ஸ், ரவீந்திர ஜடேஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் அணி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. 

அதன்படி, ஐசிசியின் 2023 ஆண்டின் வளர்ந்து வரும் ஆண்கள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு பரிந்துரையில், ரச்சின் ரவீந்திரன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜெரால்ட் கோட்ஸி,
மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி ஆடவர் 2023-ம் ஆண்டின் சிறந்த T20I கிரிக்கெட் வீரர் பரிந்துரையில் சூர்யகுமார் யாதவ், சிக்கந்தர் ராசா, அல்பேஷ் ராம்ஜானி மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

2023-ம் ஆண்டின் ஐசிசி ஆடவர் ஒருநாள் தொடரில் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் சுப்மன் கில், முகமது ஷமி, விராட் கோலி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 2023-ம் ஆண்டின் சிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் (சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது) பரிந்துரையில் விராட் கோலி, பாட் கம்மின்ஸ், ரவீந்திர ஜடேஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

2023-ம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரையில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஐசிசியின் 2023 ஆண்டின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதிற்கு பரிந்துரையில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட், மருஃபா அக்டர், லாரன் பெல் மற்றும் டார்சி கார்ட்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி மகளிர் T20I கிரிக்கெட் வீராங்கனை 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனைகள் விருதுக்கு பரிந்துரையில் ஹேலி மேத்யூஸ், எல்லிஸ் பெர்ரி, சோஃபி எக்லெஸ்டோன் மற்றும் சாமரி அத்தபத்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2023-ம் ஆண்டின் ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை 2023-ம் ஆண்டுக்கான பரிந்துரையில் ஆஷ்லே கார்ட்னர், சாமரி அத்தபத்து, நாட் ஸ்கிவர் பிரண்ட் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tags :
Advertisement