Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! துணை முதலமைச்சர் #UdhayanidhiStalin-ன் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்!

03:18 PM Oct 02, 2024 IST | Web Editor
Advertisement

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவரது செயலாளராக உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்பதை பற்றி பார்க்கலாம்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் புதிய பொறுப்புகள்:

கே. கோபால் - உயர் கல்வித் துறை செயலர்

பிரதீப் யாதவ் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளர்

ராஜேஷ் லக்கானி - வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர்

சுந்தரவல்லி - கல்லூரி கல்வி இயக்கக ஆணையர்

விஷ்ணு சந்திரன் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர்

அமுதவள்ளி - கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர்

லில்லி - சமூக நலத்துறை ஆணையர்

லலிதா - ஜவுளித்துறை இயக்குநர்

பவன்குமார் G. கிரியப்பநாவர் - பொதுத்துறை துணைச் செயலாளர்

நந்தகுமார் - தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர்

தர்மேந்திர பிரதாப் யாதவ் - தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக தலைவர்

ஸ்வர்ணா - RUSA திட்ட இயக்குநர்

பிரதிவிராஜ் - பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி)

ஜெயகாந்தன் - தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்

கூடுதல் பொறுப்புகள்

சத்யபிரதா சாஹூ - கால்நடைப் பராமரிப்பு, பால் வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

விஜயராஜ் குமார் - மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர்

Tags :
deputy cmnews7 tamilPradeep Yadavtamil naduTN GovtUdhayanidhi stalin
Advertisement
Next Article