ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை!
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயன் கேமரூன் ஜெர்மனியில் உள்ள அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் இயான் கேமரூன் (74), ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். குற்றாவளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலையாளியைப் பிடிக்க இயன் கேமரூனின் வீட்டிற்கு அருகிலுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் விண்டேஜ் கார் நிபுணராக இருந்த இவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்துள்ளார். கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் 180 செ.மீ முதல் 190 செ.மீ வரை உயரம் கொண்டவர் என்றும், வெளிர் கால்சட்டை, மஞ்சள்-பச்சை கையுறை அணிந்து இருந்தார் என்றும் தி சன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. BMW 3 Series, Z8 மற்றும் Phantom, Ghost போன்ற ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களின் உருவாக்கத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.