Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#IAFRaisingDay | சென்னையில் இந்திய விமானப்படையின் 92-ஆவது நிறுவன தின கொண்டாட்டம்!

07:32 AM Sep 09, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டம் இந்தாண்டு சென்னையில் கொண்டாடப்படவுள்ளது.

Advertisement

இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், அன்றைய தினம் விமானப்படையின் நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி 92-வது ஆண்டு விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி, வரும் அக். 8-ம் தேதியில் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த கொண்டாட்டத்தின்போது, இந்திய விமானப்படை அணிவகுப்பு, சென்னையில் காலை 7.45 மணியளவில் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான விமானக் கண்காட்சி நடைபெறும் எனவும், இதில் ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த வரலாற்று நிகழ்வு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகள், ஒரு புதிய விமானப்படை தளபதியின் தலைமையின் கீழ் நடைபெறுவதாகவும், அவர் இந்த மாத இறுதியில் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
ChennaiFrontline Fighter JetsIAFIndian Air ForceMarina BeachNews7TamilRafaleRaising DaySukhoiTejas
Advertisement
Next Article