Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வரும் 5ம் தேதி மனம் திறந்து பேசப்போகிறேன்" - செங்கோட்டையன் பேட்டி!

வருகிற 5ம் தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
11:22 AM Sep 02, 2025 IST | Web Editor
வருகிற 5ம் தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement

இதையடுத்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வருகிற 5ம் தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், என்ன கருத்து சொல்லப்போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம், அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

Tags :
ADMKEdappadipalanisamyEPSSengottaiyanTamilNadu
Advertisement
Next Article