"வரேன்... திரும்ப வரேன்" - மீண்டும் மிரட்ட வரும் அப்துல் காலிக்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சிம்புவிற்கு கம்பேக் படமாக அமைந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இதையும் படியுங்கள் : சென்னையை உலுக்கிய ஈசிஆர் சம்பவம்… இளைஞர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!
டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் "வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிபிட்டு.." என்ற வசனம் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது.
டைம் லூப் என்பதால் ஒரே கதை மீண்டும் மீண்டும் வரும் நிலையில் ஒரு இடத்தில் கூட போர் அடிக்காமல் கதையை நகர்த்தி சென்றிருந்தார் வெங்கட் பிரபு. யுவன் சங்கர் ராஜாவும் அவருடைய பங்கிற்கு இசையில் கலக்கி இருந்தார். இப்படத்தின் Bgm-ஐ பலரும் ரிங்டோனான வைத்தனர். இந்த நிலையில், நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு திரைப்படம் நாளை மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.