Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“முதலமைச்சர் ஸ்டாலினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை வரவேற்கிறேன்” - ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்!

'தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை வரவேற்கிறேன்” என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
05:07 PM Mar 22, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை வரவேற்பதாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை வரவேற்கிறேன். வெறும் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது நியாயமாகவும், சமமாகவும் இருக்க முடியாது”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும், இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக ஒரு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags :
cm stalinDelimitation MeetingHemant SorenJharkhand CM
Advertisement
Next Article