Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"#VineshPhogat இறந்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன்" -  பயிற்சியாளர் வோலர் அகோஸ் பதிவு!

07:38 PM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன் என அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பாரிஸ் நகரில் கடந்த 26-ம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 12ம் தேதி இரவு நிறைவடைந்தது. முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.

தங்கப் பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். தங்கப் பதக்கம் வெல்லாவிட்டாலும், இந்திய மனங்களை வென்று நாடு திரும்பியிருந்தார் வினேஷ் போகத் , சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்திடம் அளித்திருந்த முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் வோலர் அகோஸ் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : #Thangalaan படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த பதிவில் அவர் பதிவிட்டிருந்ததாவது :

"இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது முதல் வினேஷ் போகத் செய்த போராட்டம் உணர்வுப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ளது. அதாவது, அரையிறுதிப் போட்டி முடிந்ததும், வினேஷ் கூடுதலாக 2.7 கிலோ எடை இருந்தார். உடனடியாக ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனால், 1.5 கிலோ கூடுதலாகவே இருந்தது. பிறகு 50 நிமிடங்கள் கடும் உடற்பயிற்சி செய்தும், அவரது உடலிலிருந்து ஒரு சொட்டு வியர்வையும் வரவில்லை.

நாங்கள் அப்போது எந்த ஒரு வாய்ப்பையும் விடுவதாக இல்லை, நள்ளிரவு முதல் காலை 5.30 மணி வரை பல்வேறு உடற்பயிற்சிக் கருவிகளை கொண்டு  அவர் பயிற்சி மேற்கொண்டார். ஒவ்வொரு மணி நேரமும் வெறும் 2 - 3 நிமி இடைவெளிகள் மட்டும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருந்தார். ஒருநிமிட இடைவெளிக்குப் பிறகு உடனே பயிற்சியை தொடங்குவார். ஒரு முறை அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் விழுந்துவிட்டார். ஆனால், மீண்டும் எழுந்து உடற்பயிற்சியைத் தொடங்கினார்.

ஒரு மணி நேரம் கடுமையான வெப்பம் நிறைந்த தண்ணீரில் இருந்தார். அவரது கடுமையான உடற்பயிற்சிகளை பற்றி இங்கே என்னால் விரிவாக விளக்க முடியவில்லை. ஆனால், இப்போது ஒன்றுமட்டுமே எனக்கு நினைவிருக்கிறது, அப்போது அவர் கடும் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன். அது மட்டுமே நினைவிருக்கிறது"

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

Tags :
Olympics2024ParisParis2024Paris2024OlympicParisOlympics2024VineshPhogatWrestling
Advertisement
Next Article