For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' - தங்கம் விலை தொடர் சரிவு... இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
10:07 AM Apr 08, 2025 IST | Web Editor
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
 கண்ணா லட்டு தின்ன ஆசையா    தங்கம் விலை தொடர் சரிவு    இன்றைய விலை நிலவரம் என்ன
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

Advertisement

அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த 21ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 68 ஆயிரத்தை தொட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது.

அந்த வகையில், தங்கம் விலை கடந்த 4ம் தேதி ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5ம் தேதி கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8.,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்8) மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.102-க்கு விற்பனையாகிறது

Tags :
Advertisement