"அஜித்துடன் நடிக்க இருந்த வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு…" - உண்மையை உடைத்த விஜய் சேதுபதி!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் விஜய் சேதுபதி. பின்னணி நடிகராக சினிமா துறையில் நுழைந்த இவர் தற்போது உச்சத்தை தொட்டுள்ளார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து பெயர்பெற்றவர். குறிப்பாக இவரின் வில்லத்தனமான நடிப்பிற்கே தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோரின் படங்களில் வில்லனாக நடித்து பெரிதளவில் கவம் பெற்றார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மகாராஜா, 'விடுதலை 2' திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் தனியார் கல்லூரியின் கலை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவரிடம், நடிகர் அஜித்துடன் இணைந்து எப்போது படம் பண்ணப் போறீங்க? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "இந்த கேள்வியை என்னிடம் பலர் கேட்டுள்ளனர். ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்துவிடும் என்று நானும் நம்புகிறேன். இதற்கு முன் நடப்பதாக இருந்தது ஆனால் அது நடக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நடந்துவிடும் என்று நானும் நம்புகிறேன்" என்றார்.