'பிரதமரை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன்' - கனிமொழி எம்.பி!
கனிமொழி எம்.பி தனது X தளப் பக்கத்தில் இன்று டெல்லியில், பிரதமரைச் சந்தித்து, எனது தொகுதி மற்றும் தமிழ்நாட்டிற்கான முக்கியமான பல கோரிக்கைகளை முன்வைத்தேன். குறிப்பாக, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் (transhipment hub) அமைப்பது குறித்து வலியுறுத்தினேன். மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு அளித்த ஆதரவுக்காக பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையமாக (transhipment hub) மேம்படுத்துவதன் அவசியம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இதன் மூலம், துறைமுகத்தின் வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்து, தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்று வலியுறுத்தப்பட்டது. தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இது தென் மாவட்டங்களின் வான்வழி இணைப்பை வலுப்படுத்துவதோடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கும் ஊக்கமளிக்கும் என்று குறிப்பிடப்பட்டது.
இவை தவிர, எனது தொகுதி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பிற முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பிரதமரிடம் விவாதிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சந்திப்பு, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.