டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன் - செங்கோட்டையின் பரபரப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த 5 ஆம் தேதி நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுகவிலிருந்து பரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க கோரியிருந்தார். இதனையடுத்து அவரை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் டெல்லி சென்றார். அங்கு அவர் டெல்லி பாஜக தலைவர்களை சந்தித்தாக கூறப்பட்ட நிலையில் இன்று தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,
”ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு சென்றேன். ஆனால் உள்துறை அமைச்சரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களுடன் இன்றைய அரசியல் சூழல் பற்றி கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்களை எடுத்து சொன்னோம். இயக்கம் ஒன்றிணைவது தொடர்பான கருத்துக்களை சொன்னோம். இக்கருத்துக்கள் தொடர்பாக விவாதங்களில் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவது வரவேற்கதக்க ஒன்று. உள்துறை அமைச்சரை சந்திக்கும் போது ரயில்வே துறை அமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன் கூட்டியே செல்வதால் மக்கள் பாதிபப்டைகின்றனர். அதன் நேரத்தை மாற்ற கோரினேன். பரிசீலிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன்” என்றார்.
முன்னதாக நேற்று டெல்லி புறப்படுமுன் அளித்த பேட்டியில் அவர், பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி செல்வதாக கூறப்பட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.