Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மழை வெள்ளத்தில் மக்களை காப்பாற்றிய மீனவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

01:19 PM Jan 24, 2024 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணபணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட போது "மீனவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்" என்று கூறினார். 

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

மின்சாரம், குடிநீர், உணவு இல்லாமல் தவித்ததோடு மழைநீரும் சகதியும் முற்றிலுமாக வடிய சில நாட்கள் ஆனதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.  இதனை அடுத்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டம் முழுவதும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு தமிழ்நாடு அரசு 6000 ரூபாய் நிவாரண நிதி அறிவித்து விநியோகம் செய்தது.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில், மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணபணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது:

இதையும் படியுங்கள்:  “தக் லைஃப்” – படப்பிடிப்பு இன்று தொடங்கியது.!

"ஒட்டுமொத்த சென்னையும் உங்களை பாராட்ட வந்துள்ளனர்.  மழை வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முன்வந்தவர்கள் நீங்கள்.  மீட்பு பணிகளில் மீனவர்கள் எங்களுக்கு துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் களத்தில் நின்றோம்.  உதவி கேட்காமலே உதவி செய்ய முன்வருபவர்கள் மீனவர்கள்.  ஒவ்வொரு மழை வெள்ளத்திலும்  மக்களை மீட்டவர்கள் மீனவர்கள்.

நேர்மையும் துணிச்சலும் தான் மீனவ மக்களிடம் பிடித்த விசயம் எனக்கு.  நம்பி வந்தவர்களை தோளோடு தோள் நின்று காப்பவர்கள் தான் மீனவர்கள்.  2017-ல் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது.  அப்போது ஆட்சியாளர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது, போராடிய மாணவர்களுக்கு துணை நின்றவர்கள் மீனவர்கள்.  ஜல்லிக்கட்டு உள்ளவரை மீனவர்கள் புகழ் நிலைத்து இருக்கும்.

படகு உடைந்தாலும் பரவாயில்லை என மக்களை காப்பாற்றியவர்கள் மீனவர்கள்.  நிவாரண பொருட்களை அரசு தயார் செய்துவிடும் ஆனால் அதை மக்களிடம் சேர்த்தது மீனவர்கள் தான்.  மழை வெள்ள பாதிப்பில் அரசுக்கு நற்பெயர் கிடைக்க காரணம் மீனவர்கள்.  மீனவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசு திமுக. எனவேதான் மீனவர்கள் நல வாரிய உறுப்பினர் இயற்கை எய்தினால் குடும்பத்தினருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் மீனவ அமைப்புகள் மாநாட்டை நடத்தி, பல்வேறு மீனவர்கள் நலன் சார்ந்த் அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  மீனவர் வாழ்வில் மகிழ்ச்சி பெருக உங்கள் கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார்.  எனக்கு இறை நம்பிக்கை கிடையாது.  ஒருவர் உயிரை மற்ற ஒருவர் காப்பாற்றுகிறாறோ அவர் கடவுள்.  இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
ChennaiCycloneFishermenMichaungnews7 tamilNews7 Tamil UpdatesRoyapettahTamil Nadu GovernmentTN GovtUdhayanidhi stalin
Advertisement
Next Article