Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“TV பார்த்து கிரிக்கெட் கற்றேன்.. முறையான பயிற்சி கிடைக்கவில்லை..” - பும்ரா உருக்கம்!

07:17 AM Dec 11, 2024 IST | Web Editor
Advertisement

தொலைக்காட்சி பார்த்து கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்டேன் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், துணை கேப்டனுமான ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது போட்டி பெர்த்தின் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பொறுப்பு கேப்டன் பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது. இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி டிசம்பர் 14-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவிருகிறது.

இந்த பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது 16-17 வயதில் பந்துவீசத் தொடங்கியதாகவும், தொலைக்காட்சியைப் பார்த்து தனது திறமையை மெருகேற்றிக் கொண்டதாகவும், தனக்கு முறையான பயிற்சி எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்  12 விக்கெட்களுடன் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் ஜஸ்பிரித் பும்ரா முன்னணியில் உள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறுகையில், “நான் கிரிக்கெட்டை மிகவும் தாமதமாக விளையாடத் தொடங்கினேன். நான் 16, 17 வயதில் கிரிக்கெட்டை தொடங்கினேன். நான் தொலைக்காட்சியைப் பார்த்து கிரிக்கெட்டை விளையாடக் கற்றுக்கொண்டேன். எனக்கு யாரும் முறையான பயிற்சியும் அளிக்கவில்லை” என்றார்.

சமீப காலமாக பும்ராவின் பந்து வீச்சு குறித்து சந்தேகம் தெரிவித்து வரும் நிலையில் அது குறித்து பேசிய பும்ரா, ரன்-அப் மற்றும் அவரது தனித்துவமான பந்துவீச்சுக்கான காரணத்தையும் கூறினார். அவர் பேசுகையில், “2018 இல் அறிமுகமானதில் இருந்து 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னரும், இந்தியாவில் எந்தவொரு பயிற்சியாளரும் தனது பந்துவீச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்தப் பந்துவீச்சு நீண்ட காலம் நீடிக்காது என்று நினைத்தனர். நான் 6-7 மாதங்கள் விளையாடுவேன் என்றும் கூறினர்” என்றார்.

Tags :
AustraliaJasprit BumahNews7TamilPacerTeam India
Advertisement
Next Article